கட்டுநாயக்கவில் ஒருவர் கைது – 05 கிலோ தங்கம் பறிமுதல்

ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிறுவனத்தில் பணியாற்றும் 50 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை 4.00 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல். 282 என்ற விமானத்தில் ஜித்தாவிலிருந்து வருகை தந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து சுமார் 5.3 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் இலங்கைப் பெறுமதி சுமார் 26 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு