புதிய அரசியலமைப்பு தொடர்பில் திங்கள் விஷேட கூட்டம்

புதிய அரசியலமைப்பு முன்மொழிவு தொடர்பாக சட்டத்தரணிகளின் கருத்துக்களை பெறுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட பொதுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

அந்த விஷேட பொதுக் குழுக் கூட்டம் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு முன்மொழிவின் வரைவு மும்மொழிகளிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கிடைத்திருப்பதாகவும், அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு அந்த பொதுக் குழுக் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு