செல்பி மோகத்தால் 24 பேர் பலி

இந்த ஆண்டின் கடந்த 09 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் பாதைகளில் செல்பி எடுக்க முயற்சித்து 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

ரயில்களினால் இடம்பெறுகின்ற விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், 2016ம் ஆண்டில் ரயில் வீதிகளின் ஊடாக பயணிப்பதன் காரணமாக ரயிலுடன் மோதி ஏற்பட்ட 436 விபத்துக்களில் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன், 256 பேர் காயமடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை ரயில் குறுக்கு வீதிகளில் ரயில்களுடன் வாகனங்கள் மோதி 84 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த ஆண்டில் ரயிலில் பயணிக்கும் போது கீழே விழுந்து 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற ரயில் விபத்துக்களை குறைப்பதற்காக ரயில் வீதிகளுக்கு அருகில் வசிக்கின்ற மக்களை தெளிவூட்டுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு