கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு

வறுமையை ஒழித்துக்கட்டும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் 2030ஆம் ஆண்டு வறுமையற்ற இலங்கை தேசத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த தொலைநோக்கு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் உண்மையான சுதந்திரம், சமத்துவம் குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதார பலமற்ற மக்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்டும் வகையில் 2017ஆம் ஆண்டு வறுமையை ஒழித்துக்கட்டும் வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது எமது நாட்டில் வறுமைக்கான சவால்களை இனங்கண்டு அதற்கு நிலையான தீர்வுகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நிகழ்ச்சித் திட்டமான கிராம சக்தி மக்கள் இயக்கத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அதேவேளை, வறிய மக்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு முன்னுரிமையளித்து கிராம சக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஆரம்பத்தில் 1,000 கிராமங்களையும் 2020ஆம் ஆண்டளவில் 5,000 கிராமங்களையும் இதன்மூலம் உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு