அரசியலமைப்புத் தொடர்பில் மக்கள் புரிந்துணர்வுடன் நடக்க வேண்டும்

புதிய அரசியலமைப்பிற்கான சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில் வெளியாகும் சில தவறான விமர்சனங்கள் தொடர்பில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொருத்தமான முறையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்காமையினாலேயே மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும், நாட்டை நேசிக்கும் உண்மையான மனிதர்கள் என்ற வகையில் சகல இனங்களுக்கிடையிலும் அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் இழக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நட்புறவு உள்ளிட்ட விடயங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் சில பிற்போக்குவாதிகளினால் அரச நடவடிக்கைகளில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு