சிறந்த நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி

ஸ்திரமான பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கேற்ப வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அவசியமென நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர், சீன மற்றும் இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்காசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளில் சீனாவும் தாய்லாந்தும் மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும், இந்த நாடுகள் இலங்கையின் சராசரி தரத்தைவிட உயர்ந்தளவில் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, இலங்கை பொருளாதார கொள்கையினை மேம்படுத்த சர்வதேச ரீதியாக நாடுகளுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு