ஸ்பெய்னின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை ஏற்க முடியாது

ஸ்பெய்னின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமென கட்டலோனிய ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டியமோன்ட் தெரிவித்துள்ளார்.

அப்படியாக ஸ்பெய்னின் ஆட்சி வரும்பட்சத்தில் அது 1939ஆம் ஆண்டு முதல் 1975 வரையிலான காலப்பகுதியில் ஜென்ரல் ஃபிரான்கோவின் ஆட்சி காலத்தைவிட மோசமானதொரு நிலையை எதிர்நோக்க வேண்டி வருமென எச்சரித்துள்ளார்.

கட்டலோனியாவின் தலைவர்களை அகற்றி நாடாளுமன்றத்தை செயலிழக்கும் தன்மையை ஸ்பெய்னின் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக மரியனோ ரஜ்ஜோஸ் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை, ஸ்பெயினின் அரசியல் யாப்பு நீதிமன்றம் கட்டலோனியாவில் சுதந்திரமான கருத்து கணிப்பு வாக்குப் பதிவொன்றை மேற்கொள்வதற்கு தடைவிதித்திருந்த போதிலும் வாக்கு பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனிடையே, கட்டலோனியாவிலுள்ள பிராந்திய தலைநகர் பசிலோனாவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திரத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 04 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு