அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டை அழித்துவிடும்

அரசாங்கத்தின் நிலை தொடர்ந்தும் இவ்வாறே செல்லுமானால் நாடு விரைவில் அழிவைச் சந்திக்குமென கடம்பே ராஜோபவனாராதிபதி கெப்படியாகொட சிரிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்பொழுது மாட்டியுள்ள அரசாங்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சந்தர்ப்பத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நேற்று (22) கடம்பே ராஜோபவனாராதிபதி கெப்படியாகொட சிரிவிமல சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்ற போதே, தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வரலாற்று நெடுகிலும் நாடு செல்ல வேண்டிய பாதையை சரிசெய்து கொடுத்தது மகா சங்கத்தினரே ஆவர். தற்போதைய அரசாங்கம் மகா சங்கத்தினருடன் அகௌரவமான முறையில் நடந்துகொள்வதாகவும், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தி காணாதென நினைத்தே, மக்கள் இன்னொரு செயற்பாட்டுக்காக இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர். தற்பொழுது தேர்ந்தெடுத்த அரசாங்கம் இருந்த அரசாங்கத்தை விட மோசமாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு