தற்போதைய காலநிலையில் மாற்றம்

நாட்டில் இடைக்கால பருவ காலநிலை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக் கூடுமென குறிப்பிட்டுள்ள வானிலை அவதான நிலையம், இடி, மின்னலிலிருந்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு