கோட்டாபய கைதாகலாம்?

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளதென ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபயவின் கைது தொடர்பாக சட்ட, பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று, கடந்த வாரம் இடம்பெற்றதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் காணப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்து, இதில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோட்டாபய, கடந்த வாரம், நாடு திரும்பியிருந்தார். அப்போது அவர் கைது செய்யப்படுவார் எனவும், அவர் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. சில அதிகாரிகளின் அறிவுரையின் பேரிலேயே, அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, அவர் கைது செய்யப்படவுள்ளதாக தற்போது மீண்டும் தெரிவிக்கப்படுவதுடன், தான் கைதுசெய்யப்படவுள்ள விடயம், கோட்டாபயவுக்கு தெரியுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு