அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலையில் கவனயீர்ப்பு (Photos)

விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்ததைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (23) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு, தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு, பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.

அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதி வேண்டும், தமிழன் நீண்டு வாழ, இத்தனை வருடம் சிறையில் இருந்தும் இரக்கம் வரவில்லையா, நாமத்தில் மட்டும் நல்லாட்சியா, அரசியல் கைதிகளின் உரிமையைப் பெற்றுக்கொடு, நிபந்தனையின்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு நியாயமானதா, அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு