புதிய அரசியலமைப்புத் தொடர்பில் உண்மை விபரங்களை அறிய வேண்டும்

புதிய அரசமைப்புத் தொடர்பாக, உண்மையான விபரங்களை அறியாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதைக்கின்றனரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொலன்னாவை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வைபவம், அலரிமாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கட்சிகளின் பதில்களையும் இடைக்கால அறிக்கையில் இணைத்துக் கொள்வதற்கு நாம் முடிவெடுத்ததன் மூலம், விவாதத்துக்கு வருவதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் படிக்க முடியும். இல்லாவிடில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரியான தகவல்களை அறியாமல், சில விடயங்களைக் கூறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு