வவுனியா பொது அமைப்புகளைச் சந்தித்தது ஈ.பி.டி.பி (Photos)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்ட கிராம மட்ட அமைப்புக்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்திருந்தனர்.

இதன்போது, அபிவிருத்தித் திட்டங்கள், சுயதொழில் போன்ற பயனுள்ள விடயங்களைப்பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் சீவரத்தினம், கட்சியின் ஆலோசகர் மகேஸ்வரன், வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு