நஸீர் இல்லம் முற்றுகை

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் இல்லத்தை இன்று முற்றுகையிட்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத்த ஏ.எல்.முஹம்மட் நஸீர், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் அது எமக்குக் கிடைக்கும் காலம் கனிந்துவிட்டதாகவும், இச்சந்தர்ப்பத்தில்தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் பொறுமைக்குப் பின்னால்தான் எமக்கு வெற்றியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்னுடன் வைத்திருக்கும் பற்றைத் தலைவர் மீதும் வைக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான கட்சிப் போராளிகளாவீர்கள். எனக்குக் கட்சி என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ்தான். கட்சியிலும் தலைவரிலும் நான் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளேன். அதேபோல் தலைமையும் என்மீது நம்பிக்கை தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு