அரிசிக்குக் கட்டுப்பாட்டு விலை இல்லை?

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்காதிருப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

தேவையேற்படின் எதிர்காலத்தில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அறிவிப்பதற்கும் வாழ்க்கை செலவு குழு தீர்மானித்துள்ள நிலையில், அரிசியின் விலையை அதிகரிக்கப் போவதில்லையென அரிசி விற்பனையார்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி போதுமான அளவு சந்தையில் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், உள்நாட்டு சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அரிசி விலை அதிகரிப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு