யாழ். பல்கலைக்கழகத்திற்கு இந்தியா உபகரணங்கள் அன்பளிப்பு

இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று (23) கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்றது. இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் 48 மில்லியன் ரூபாவுக்கு இரண்டு அதி சொகுசு பேரூந்துகள், டபிள்கப் வாகனம், மற்றும் உழவு இயந்திரம் என்பன பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொகுதி வாகனங்கள், உபகரணங்கள் என்பன விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இவற்றைக் கையளித்துள்ளார்.

இதன்போது, யாழ். பல்கலைகழக துணைவேந்தர் விக்னேஸ்வரன், மற்றும் பொறியியல், விவசாய பீடங்கள் உள்ளிட்ட பீடங்களின் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு