சீனாவை நெருக்கும் அமெரிக்கா

வடகொரியா தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க சீனாவை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.

அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது, இதற்கான அழுத்தத்தை அவர் வழங்குவாரென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வடகொரியாவை மேலும் தனிமைப்படுத்துவதே டொனால்ட் ட்ரம்பின் இலக்காகும். இதற்காக அவர் சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் மற்றும் ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் போது வடகொரியா தொடர்பில் முக்கிய அவதானத்தைச் செலுத்தவுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு