வடகொரியாவுக்குப் பதிலளிக்கத் தயார்

வடகொரியாவால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் தீர்மானமிக்கதும், நிச்சயமாக நடைபெறக் கூடியதுமாகுமென ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸில் இடம்பெறும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றியபோதே ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுநோர் ஒனோடேரா இதனைத் தெரிவித்துள்ளதுடன், வடகொரியாவின் இந்த அசாதாரணமான அச்சுறுத்தல்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்தபோது அவர் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு