முல்லைத்தீவில் தேடுதல்

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை பாடசாலைக்கு முன்னால், புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் கனரக வாகனத்தைப் பயன்படுத்தி, விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அம்பலவன் பொக்கணையானது இறுதிக்கட்ட யுத்ததத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும். இந்த நிலையில், வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பாதுகாப்பான பகுதியென இனங்காணப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு