
கொழும்பு,ஒக் 28
உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதித் தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் முழுமையான திறமையுடன் இருப்பார்கள் என தான் நம்புவதாக அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவிக்கின்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டிகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கான புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
உலகக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளின் முதலாவது போட்டியில் இலங்கை அணி சிறந்த முறையில் விளையாடவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அதன் பின்னரான போட்டிகளில் திருப்தியடையும் வகையில் விளையாடியதாகவும் அவர் கூறினார்.
நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெற முடியுமாயின், சிறந்ததொரு நிலைக்கு இலங்கை அணிக்கு வர முடியும் எனவும் மஹேல ஜயவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.