சைட்டம் விவகாரம்; இன்று இறுதித் தீர்மானம்?

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதுஎவ்வாறு இருப்பினும், தனது முடிவு குறித்து அரசாங்கம் இதுவரை எதனையும் தெரியப்படுத்தவில்லையென சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் எச்.ஆர்.குசைன் தெரிவித்துள்ள அதேவேளை, பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையில், சயிட்டம் வைத்திய கல்லூரியை, மாலபே தகவல் தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைப்பது குறித்த பரிந்துரைகள் இருப்பதாக சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெரும்பாலான பகுதிகள், மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு