வடக்கு, கிழக்கின் அரசியல் செயற்பாடுகள் குறித்து இரகசிய அறிக்கை தயார்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றுவரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசிய புலனாய்வுப் பரிவினர், இரகசிய அறிக்கையொன்றைக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் செயற்பட்ட விதம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகள், அரசியல்வாதிகளின் போக்கு என்பன தொடர்பில் இதில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் செயற்படுதல் மற்றும் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தேசிய புலனாய்வுப் பிரிவு, குறித்த அறிக்கை ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த அறிக்கையில் குறித்த இரு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தென்பகுதி அரசியல்வாதிகளுடன் எவ்வாறான தொடர்புகளைப் பேணிச் செயற்படுகின்றனர் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கை தொடர்பில், ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு சபைக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு