மக்களின் எதிர்பார்ப்பை மீறி அரசியலமைப்பைக் கொண்டுவர முயற்சி

புதிய அரசமைப்பை, நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி, பலாத்காரமாகக் கொண்டுவருவதற்கு, அரசாங்கம் முயல்வதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய, கோட்டே உட்பட சகல பீடங்களும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், கத்தோலிக்க சபையும் யாப்பு விடயத்தை அவதானமாகக் கையாள வேண்டும் என்று கோரியுள்ளதாகவும், முழு நாடும் புதிய அரசமைப்பு உருவாவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பலாத்காரமாக புதிய யாப்பை திணிக்க அரசாங்கம் முயல்கிறது என்றும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகா சங்கத்தினர் சொல்வதைக்கூட இந்த அரசாங்கம் செவிமடுப்பதாக இல்லை. பெரும்பான்மையினரும் முழுநாடும் புதிய யாப்புக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, அரசமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் கூறிவருகிறது. இந்தப் புதிய யாப்பினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றார்.

தேர்தல் எப்பொழுது நடத்தினாலும் தாம் அதற்குத் தயாராக இருப்பதாகவும், தேர்தலுக்கு முகங்கொடுக்க பயந்தே அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது. உள்ளூராட்சி தேர்தலில் தாம் அமோக வெற்றியீட்டுவோம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு