மோசடியாளர் ஒருவர் கைது

புதையல் மூலம் பெறப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் எனக் கூறி, அவற்றை 45 இலட்சம் ரூபாவுக்கு விற்க முற்பட்ட நபர் ஒருவர் தம்புள்ளை பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கெக்கிராவ, கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இதற்கு முன்னரும் கெக்கிராவ, அனுராதபும், மிகிந்தலை போன்ற பகுதிகளில் புதையல் பொருட்கள் எனக் கூறி, போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு