அரசியல் கைதிகள் தொடர்பில் நாளை மேன்முறையீட்டு மீளாய்வு மனு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 03 அரசியல் கைதிகள் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல் கைதிகள் இன்று 31ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களது வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை மற்றும் போதைவஸ்துக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பாடு ஒன்றை வழங்கும் வரையில் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடமாட்டார்கள் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு