ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீண்டும் பணியில் இணைவு

இராணுவத்திலிருந்து தப்பியோடி, தலைமறைவாகியிருந்தவர்களில் 1,131 பேர், கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் பணியில் இணைந்துகொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த 23ஆம் திகதி பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டதுடன், அக்காலம், நவம்பர் 15 வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினர், கடமைக்கு சமுகமளிக்காமலும் அறிவிக்காமலும் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு