அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுக்குச் செல்ல வேண்டும்

சிங்கள மக்களாலும், மஹாநாயக்க தேரர்களாலும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றுக்கு செல்ல வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அதிகாரப் பகிர்வு, பிரதேச அபிவிருத்தியென தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும், அரசியலமைப்பை மாற்றி, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கடந்த 50, 60 வருடங்களாக அவர்கள் கோரி வருவதனாலேயே, மோதல் இடம்பெற்றதுடன், திம்பு மற்றும் இந்தியாவிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றதுடன், வெளிநாடுகளும் இதனைத் தெரிவித்த நிலையில், ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களுடன் பேசினால்தான் அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு, நாட்டை பிளவுபடுத்தாமல், ஒற்றை ஆட்சியை இல்லாது செய்யாமல், பௌத்த மதம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் நியாயமான தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும் என்றும், இலங்கையிலுள்ள சிங்களவர்களாலும், மஹாநாயக்க தேரர்களாலும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கமல் குணரட்ன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கூறுவதுபோன்று செயற்பட்டால் தமிழர்கள் அதற்கு பதிலொன்றை வழங்குவர். அதற்கு யார் தீர்வு வழங்குவதென அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, வடக்கில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை விடவும், விக்னேஸ்வரன் பிரபல்யமடைந்துள்ளதாகவும், மத்தியஸ்த அடிப்படையில் பிரச்சினையை தீர்க்க சம்பந்தனும் சுமந்திரனும் முயற்சிக்கின்றனர். புலிகளின் நிலைப்பாட்டில் அடிப்படைவாதத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்க விக்னேஸ்வரன் முயற்சிக்கும் நிலையில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் மத்தியஸ்த நிலைப்பாட்டில் இருப்பதாகவும், மத்தியஸ்த நிலையில் இருந்து எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை ஏற்படாத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு