வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி

வவுனியாவில் இலங்கையின் ஆதிவாசிகளின் கிரிக்கெட் அணி ஒன்று முதன்முதலாக போட்டி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளது.

சமாதானமும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் என்ற தொனியில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்பின்பேரில், வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சியின் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 9.00 மணிக்கு குறித்த போட்டி இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்விற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அனுசரணை வழங்குவதுடன், இச்சுற்றுப் போட்டியில் இலங்கை ஆதிவாசிகளின் அணி, வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அணி மற்றும் வவுனியா பொலிஸ் அணியினரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு