இளவாலையில் ஒருவர் அடித்துக் கொலை

தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளவாலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (29) இரவு 7.00 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய வயோதிபரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இளவாலைப் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் உயிரிழந்த நபருக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளதனை அறிந்த பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் தொடர்புடையவரை நேற்று (30) வீதியில் வைத்து அடித்துள்ளார்.

அடி வாங்கியவர் இரவு 7.00 மணியளவில் அடித்தவரின் வீட்டிற்கு சென்ற போதே தனது வீட்டில் வைத்து மீண்டும் அடித்துள்ளார். அடிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு