உரிமையை நிலைநாட்ட யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 27 வருடங்களாகின்ற நிலையில், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ். மாவட்ட முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில், யாழ். ஐந்து சந்திப் பகுதியில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்றுவரை தமது மீள்குடியேற்றத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு