அ’புரம் சிறைக்குச் சென்றார் டக்ளஸ் (Photos)

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்றையதினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது குறித்த அரசியல் கைதிகள் தமது வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றிலிருந்து மீளவும் வவுனியா நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதன் நியாயத் தன்மையையும் டக்ளஸ் தேவானந்தா எம்.பியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு