2018ற்கான பாதீடு 9ஆம் திகதி சமர்ப்பிப்பு

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின், 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் எதிர்வரும் 9ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு – செலவுத் திட்டத்தை, பாணந்துறை பொல்கொட கங்கைக்கு அருகிலுள்ள இயற்கை வளங்களைக் கொண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிலிருந்து தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மங்கள சமரவீர, தன்னுடைய மங்கள திட்டத்தை, கொள்கைத் திட்டமாகவே முன்வைக்கவுள்ளதாகவும், அதற்காக, அதிகாலை முதல், நள்ளிரவு வரையிலும் பல்வேறு மட்டத்தைச் சேர்ந்தவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்டம் என்பது, பொருட்களின் விலைகளைக் குறைப்பது மற்றும் வரி அறவிடுவது என்ற சமூக சித்தாந்தத்தை மாறியமைத்து, நாட்டுக்கான சரியான நிதிக்கொள்கையை, முன்வைப்பதற்குத் தேவையான சுற்றுச்சூழலை, வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக இம்முறை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு