டெங்கு அபாயம்

புத்தளம், பேராதனை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயமுள்ளதாக அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் 07 கிராம சேவகர் பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாகவும், பேராதனை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையின் போது, தமது சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு