யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும்?

யாழ். பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 12ஆம் திகதி விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு