நுவரெலியாவில் மேலும் இரு உள்ளூராட்சி மன்றங்கள் தேவை

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒத்துழைத்ததைப் போன்று, அந்த மாவட்டத்தின் அங்குராகெத்தை, வலப்பனை மற்றும் கொத்மலை ஆகிய பிரதேசங்களின் உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிக்கவும் ஒத்துழைக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதனிடையே, தமிழ் மொழிமூல நீதிபதிகளை அதிகளவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், உள்ளுராட்சி தேர்தல் முறைமையின் கீழ் சிறுபான்மையினரின் அரசியல் பிரவேசம் பாதுகாக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு