சத்தியக் கடதாசி பெறத் தீர்மானம்

சமூகத்தின் சந்தேகத்தைப் போக்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், வேறு நாட்டின் பிரஜைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கான சத்தியக் கடதாசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 19ஆவது திருத்தத்தின் ஊடாக, வேறுநாட்டில் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற ஒருவர், இலங்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதால், உறுப்பினர்கள் இரட்டை பிரஜைவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, சத்தியப்பிரமாணம் செய்யும் போதே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப் பிரஜைகளுக்கான சட்டம், கொள்கையை வழங்குகின்ற மற்றும் எங்களுக்கான நிதி நிர்வாகத்தை செய்கின்ற நிறுவனமே நாடாளுமன்றமாகும். அதில், வெளிநாட்டுப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற ஒருவர், இலங்கை மக்களின் நலன்புரிக்காகச் செயற்படுவரா என்றும் வினவியுள்ளார்.

இவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னரே அவருடைய பிரஜாவுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு