கல்வி இராஜாங்க அமைச்சர் அதிருப்தி

கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியைக்கொண்டு தமிழ் கல்வி முன்னேற்றத்துக்காக, முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு தமக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி தனக்கு வழங்கப்பட்ட போதிலும் இதுவரை பெயரளவுக்கே தான் இயங்கி வருவதாகவும், எந்த அதிகாரங்களையும் அமைச்சு தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே தனக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும், கல்வியமைச்சரே, சகல அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு செயற்படுவதாகவும், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சராகப் பொறுப்பெற்றது முதல் இதுவரை சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டுமெனக் கருதுவதுதான் பிரச்சினையாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சுப் பதவியை வைத்து என்ன செய்வது. தமிழ் மக்கள், கல்வி ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் வருகின்ற நிலையில், அவர்களது கோரிக்கைகளை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை எனவும், அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே, தமிழ்க் கல்வி அபிவிருத்திக்குச் செயலாற்ற முடியும். அரசாங்க வர்த்தமானி அறிவித்தல், கல்வி இராஜாங்க அமைச்சுக்குப் பல்வேறு பணிகள் பொறுப்பளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு