டுபாயில் கிரிக்கெட் நிறுவனம் ஆரம்பிக்கும் இந்திய நட்சத்திரம்

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மகேந்திரசிங் டோனி டுபாயில் கிரிக்கெட் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து இந்த கிரிக்கெட் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மத்திய துடுப்பாட்ட வீரரான யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி நிறுவனங்களை இந்தியாவில் நடத்திவரும் நிலையில், டோனி டுபாயில் கிரிக்கெட் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு