ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்காகவே கணக்காய்வுச் சட்டம் தாமதப்படுத்தப்பட்டது

ஊழலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையிலேயே தேசிய கணக்காய்வு சட்டம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் கணக்காய்வு ஆணைக்குழுவும் ஒன்று. குறித்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள போதிலும், தேசிய கணக்காய்வு சட்டம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் ஆணைக்குழுவின் ஊடாக எதிர்ப்பார்க்கப்பட்ட சேவையை பெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு முறையாக செயற்பட ஆரம்பித்தால் பல்வேறு பாரிய ஊழல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளிவருமென சிலர் அஞ்சுவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு