இரட்டைகொலை படுகொலையாளிகளுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் (Photos)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கிராமத்தில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இளம் தாய் மற்றும் மகன் இரட்டைப் படுகொலையாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக வேண்டானெக் கோரி, கிராம மக்கள், இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியருகே ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் சவுக்கடி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, மயிலம்பாவெளி, தன்னாமுனை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த இரட்டைப் படுகொலையில் பொலிஸாரும் விஷேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கொலைகாரர்களை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தார்கள். அவர்களது பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ள போதிலும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் ஒரு சில சட்டத்தரணிகள் முயல்வது மிகவும் கவலைக்குரியதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலைகாரர்களுக்குச் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாதென வலியுறுத்தியும், கொலையாளிகளுக்கு அதிகூடிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமைதியான முறையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இப்படுகொலையின் பிரதான இரு சந்தேகநபர்கள், படுகொலை இடம்பெற்ற வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு