உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி விரைவில்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் இடம்பெறும் என்றும்,தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கான வர்த்தமானி இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு