நீதிமன்றில் ஆஜராகுமாறு பஷிலுக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கு விசரணையினை வேறு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான இறுதி அறிவிப்பு நாளை (15) அறிவிக்கப்படுமென கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடன் கூடிய 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டு அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக குறித்த இருவர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது மேலும் 05 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த வழக்கை நாளுக்கு நாள் காலந்தாழ்த்தும் நோக்கில் பிரதிவாதிகள் இவ்வாறு கோரி வருவதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு