சம்பூரில் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த முதற்கட்ட மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணி, சம்பூர், ஆலங்குலம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதியை, இம்முறை மிகச்சிறப்பான முறையில் வெளிப்படையாக துயிலுமில்லங்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

அன்றைய நாளில் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு பாரபட்சமின்றி ஒன்றிணைந்து அகவணக்கம் செலுத்தி அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு