தனுஷ்கோடியில் கரையொதுங்கிய இலங்கை படகு தொடர்பில் விசாரணை

தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரையில் நின்ற இலங்கை பிளாஸ்டிக் படகை உளவுத்துறையினர் கைப்பற்றி, அதில் வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் திங்கள்கிழமை மீனவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது, ஒத்ததாழை பகுதியில் இலங்கை படகு நிற்பதை அவதானித்துத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் படகை சோதனையிட்டபோது, அந்த படகு இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதும், அதில் மீன்பிடி வலைகள் இருந்ததும் தெரியவந்ததுடன், படகில் இயந்திரம் இல்லாத நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, படகை காவல்துறையினர், கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

படகில் யாரும் வந்தனரா என்பது குறித்து உளவுத்துறையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் யாரையும் கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென மீனவர்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு