அரச சேவை மீளக் கட்டியெழுப்பப்படும்

வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களுக்கு முன்னதாக வலுவான அரச சேவை நாட்டில் இருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட அரசியல் தலையீடு காரணமாக அரச சேவை சீர்குலைந்ததாகவும் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஊழல் மோசடியில் ஈடுபடுவது தொடர்பில் நாட்டிற்குள் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு