காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்திப்பிற்கு 08 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேர் செல்லவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்காக நேரம் ஒதுக்க வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்திப்பிற்கு விரைவில் பொருத்தமான திகதி ஒன்றை அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்பிரகாரம் நாளை நண்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதியின் செயற்பாடானது வரவேற்கத்தக்கதென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தம்மை அழைத்த ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவாரென எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு