பூர்வீக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது – கரந்தாய் மக்கள் விசனம்

தமது பூர்வீகக் காணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபை கையகப்படுத்தியுள்ளதாக கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, கரந்தாய் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கரந்தாய் பகுதியில் 1976ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் காணி வீதம் 50 பேருக்கு காணி வழங்கப்பட்டதாகவும், அன்று முதல் குறித்த காணியில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்த மக்கள், யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் தமது காணிகளை நோக்கி வந்த போதிலும், தென்னை பயிர் செய்கை சபை காணிகளைக் கையப்படுத்தியிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தம்மிடம் ஆவணங்கள் காணப்படும் நிலையில், பல தரப்பினரிடமும் இது தொடர்பில் முறையிட்ட போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் கரந்தாய் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி அரசாங்க தெங்கு பயிர் செய்கை சபைக்கு சொந்தமானது எனவும் இது தொடர்பான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்று வருவதாகவும் சிரேஷ்ட தென்னை அபிவிருத்தி அதிகாரி ஜே.சத்தியேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு