மின்வலு மோட்டார் வாகனங்களுக்கு வரிச் சலுகை

புதிய மின்வலு மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்ட வரிச் சலுகையை, ஒரு வருடங்கள் வரை பயன்படுத்திய மின்வலு மோட்டார் வாகனங்களுக்கும் வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மின்வலு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய 10 இலட்சம் ரூபா வரிச் சலுகை வழங்கப்படுமென இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட போதிலும், வாகன இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய, இந்த யோசனையில் திருத்தத்தை மேற்கொள்ள நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு