வருடத்தின் முல் மூன்று மாதங்களில் 1,228 முறைப்பாடுகள் பதிவு

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில், இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையிலான முதல் மூன்று மாதங்களில் 1,228 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகளில் 203 முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும், 186 முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிகத் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 355 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை நிறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பதுளை, கல்முனை, கண்டி, மாத்தறை ஆகிய பிரதேசங்களிலிருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ஆகக் கூடுதலான முறைப்பாடுகள், கண்டி பிரதேசத்திலிருந்தே கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆகக் குறைந்த முறைப்பாடான 30 முறைப்பாடுகள் திருகோணமலை பிரதேசத்திலிருந்து கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு