புதிய தமிழரசுக் கட்சி உதயம்?

தமிழ் அரசியல் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பொறுப்பு, இரா. சம்பந்தனையும் கூட்டமைப்பை உருவாக்கியவர்களையுமே சாருமென தமிழ்த் தேசியப் பணிக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி ப.ஸ்ரீதரன் மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், அவர்கள் நேற்று (15) கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலும் பலரை அரவணைத்து உள்வாங்கி, பலம் பெற்று ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாக அமைந்திருக்கின்ற நிலையில், கூட்டமைப்பு உடைந்து விடக்கூடாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழரசுக் கட்சியினர் சிலரும் பிரிந்து இன்னுமொரு தமிழரசுக் கட்சியை அமைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பை பிரித்தாளும் அரசியல் கத்துக்குட்டிகள் பிரித்தாண்டு வெறுப்படையச் செய்துள்ளனர் என்பதே யதார்த்தம். எனவே, கூட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இரா. சம்பந்தனையும் கூட்டமைப்பை உருவாக்கியவர்களையும் சாரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு